Dr.ஆறு இராமநாதன்

நாட்டுப்புறவியலாளர்

மேலும் படிக்க

வெளியிடப்பட்ட நூல்கள்

இவர் எழுதி பதிப்பித்து வெளியிட்ட நூல்கள் நாற்பத்தி ஐந்து. இரு சிறுகதை தொகுப்புகள், பாரதியார் உரைநடை பற்றிய ஒரு நூல் தவிர்த்து அனைத்துமே நாட்டுப்புறவியல் சார்ந்த நூல்களே. தமிழகம் எங்கும் களப்பணி வாயிலாக சேகரிக்கப்பட்ட கலைகள், பாடல்கள், கதைகள், விடுகதைகள், வழிபாடுகள் போன்றவற்றயும் அவற்றை பற்றிய ஆய்வுகளுமாக அமைந்தவை அந்நூல்கள்

மேலும் படிக்க

பணி

சென்னை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆய்வாளராக இரண்டு ஆண்டுகள் (1980-82) பணி புரிந்த பின், தமிழ் பல்கலைக்கழகத்தில் (20.10.1982) சேர்ந்து நாட்டுப்புறவியல் துறை பேராசிரியராக தலைவராக, மொழிப்புல தலைவராக, பதிப்புத்துறை இயக்குநராக, தொலைநிலை கல்வி இயக்குனராக என்று பல பணிகளை செய்து 30.06.2011 இல் பணி நிறைவு செய்தார். பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலும் தமிழ் பல்கலைக்கழகத்திலும் தகைசால் பேராசிரியராக பணியாற்றினார்

மேலும் படிக்க

விருதுகள்

இவருடைய படைப்புகளுக்கு பதினோரு பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கான இரு பரிசுகளும் இதில் அடங்கும்

மேலும் படிக்க

குடும்பம்

பவளக்கொடி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு எழிலரசி என்ற மகளும், அருணன் என்ற மகனும் உள்ளனர்.

மேலும் படிக்க